கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் - ‘இன்னோவேஷன் லேப்’ திறப்பு :

மதுராந்தகத்தை அடுத்த சின்னக் கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தி அரிய வகை கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்காக மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ‘இன்னோவேஷன் லேப்’ திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தை சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் திறந்துவைத்து உரையாற்றினார். கல்லூரி இயக்குநர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் மருத்துவர் அண்ணாமலை ரகுபதி, முதல்வர் காசிநாத பாண்டியன், புல முதல்வர் சுப்பாராஜ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளான வரவேற்கும் ரோபோ, ட்ரோன், சூரிய சக்தியால் இயங்கும் ஆட்டோ, மருத்துவக் கழிவுகளை அகற்றும் ரோபோ போன்ற பல்வேறு படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில்பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நாடு முழுவதிலும் இருந்து பன்னாட்டு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடம் தொழில் சார்ந்த ஆக்கக்கூறுகள் குறித்து கலந்துரையாடினர். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE