திருப்புவனம் அருகே தரமின்றி கட்டப்பட்ட அரசு பள்ளிச் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே சலுப்பனோடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 68 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஊர் கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதி திட்டத்தில் 2017-ம் ஆண்டு ரூ.8.50 லட்சத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. அப்போதே சுற்றுச்சுவர் தரமின்றி கட்டப்படுவதாக புகார் எழுந்தது.
கட்டி முடித்த பின் ஓராண்டில் சுற்றுச்சுவர் சேதமடையத் தொடங்கிய நிலையில், அது பற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் திடீரென கிழக்கு பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மற்ற பகுதிகளில் உள்ள சுற்றுச்சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கரோனா ஊரடங்கால் மாணவர் கள் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சாந்தி சோணைமுத்து கூறுகையில், சுற்றுச்சுவர் கட்டும்போதே தர மாக இல்லை என்று கூறினோம். ஆனால் அதையும் மீறி கட்டினர். தற்போது சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. பள்ளி திறப்பதற்கு முன்பு மற்ற பகுதிகளில் உள்ள சுற்றுச்சு வரையும் முழுமையாக இடித்து விட்டு தரமாக சுவரை கட்டித்தர வேண்டும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago