தமிழகத்தில் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், கல்லூரிகளில் ஏற்றுமதி தொழில் சம்பந்தப்பட்ட கல்விப் பிரிவை தொடங்க வேண்டும் என அரசுக்கு கொமதேக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கொமதேக மாநில பொதுசெயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்றுமதிக்கான தமிழக அரசின் கொள்கை மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான மேம்பாட்டு குழு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதை கொமதேக வரவேற்கிறது. தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியை அதிகரிக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதன்படி, தனியார் பங்களிப்புடன் மூன்று பொதுத்துறை நிறுவனங்களையாவது அமைப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
காற்றாலை மின்சாரம், சூரிய மின்சாரம் போன்றவற்றை 24 மணி நேரமும் கிடைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சென்னை துறைமுக விரிவாக்கம், சென்னை இரண்டாம் விமான நிலையம், கோவை விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரித்து, நடுக்கடலில் கலப்பதற்கான திட்டங்களை குஜராத், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களை போல் நடைமுறைப்படுத்த வேண்டும். முக்கியத் துறைகளில் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் இரண்டு இடங்களிலாவது தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களை (ஐடிஐ) ஏற்படுத்த வேண்டும். கன்டெய்னர் பற்றாக்குறையை தீர்க்க அதன் தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும். கல்லூரிகளில் ஏற்றுமதி தொழில் சம்பந்தப்பட்ட கல்விப்பிரிவை தொடங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago