நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில், 20 படுக்கைகள் கொண்ட குழந்தைகளுக்கான கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்தார். இம்மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு தீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஒரு அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 6 படுக்கைகள் மற்றும் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவக் கண்காணிப்பிற்காக 2 படுக்கை வசதி உள்ளது. இத்துடன் தற்போது கூடுதலாக 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ. பெ.ராமலிங்கம், நன்கொடையாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago