579 இடங்களில் சிறப்பு முகாம் அமைத்து - ஈரோட்டில் நாளை ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் நாளை 579 முகாம்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (26-ம் தேதி) நடக்கவுள்ள கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எச். கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் நாளை (26-ம் தேதி) நடைபெறும் மூன்றாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில், 579 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முகாமிற்கென, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும், பள்ளியில் இருந்து முகாமிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு பாகத்திலும் குறைந்தபட்சம் 200 நபர்களுக்கு டோக்கன் கொடுத்து, அவர்களை தடுப்பூசி முகாமிற்கு அழைத்து வர வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவருக்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாவிட்டாலும் தடுப்பூசி டோக்கன் வழங்க வேண்டும்.

முகாம் குறித்த செய்தியை ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த மாணவர்கள், தன்னார்வலர்களைப் பயன்படுத்தலாம், என்றார். கூட்டத்தில் வருவாய்துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்