பல மாதங்களாக பூட்டிக்கிடக்கும் பொதுக்கழிப்பிடத்தை திறக்கக் கோரி பெரியமணலி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் பெரியமணலி ஊராட்சியில் உள்ள ஜேடர்பாளையத்தில், 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில், இரு ஆண்டுகளுக்கு முன்பு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது.
இந்த கழிப்பிடம் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனை திறக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர்.சக்திவேல் தலைமையில், அப்பகுதி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரியமணலி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஊராட்சித் தலைவர் சேகர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுக்கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago