சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி - கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள், கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாகஇக்கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 5 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பொருட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். ஆகவே, அரசு கடந்த 5 மாதங்களாக எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல கவுரவ விரிவுரையாளர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக கல்லூரிக்காக வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் வழங்காமல் இருப்பது, எங்களை மட்டுமின்றி எங்களை சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவரையும் பாதிக்கிறது. எனவே, அரசு துரித கதியில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்