திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய சமீபத்தில் திருப்பாச்சூர் விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என, சிலம்பரசனிடம், கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவரும், திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலருமான திருமால்(47) தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சிலம்பரசன், விஏஓ திருமால் மீது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஆலோசனையின்படி, நேற்று விஏஓ திருமாலிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரம் பணத்தை சிலம்பரசன் அளித்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், லஞ்சம் வாங்கிய திருமாலை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago