நல வாரியத்தில் உறுப்பி னராகச் சேர ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் 2008 முதல் தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா தூய்மைப் பணியாளர்களுக்கு தாட்கோ மூலமாக தூய்மைப் பணிபுரிவோர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதில் கல்வி, திருமணம், மகப்பேறு, முதியோர் உதவித் தொகை மற்றும் கண் கண்ணாடி வாங்கிட உதவித்தொகை, விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக அனைத்து அலுவலகங்களுக்கும் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அமைப்புசாரா தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், உதவி செயற்பொறியாளர், செயல் அலுவலர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரில் யாராவது ஒருவரின் கையொப்பத்துடன் மாவட்ட மேலாளர், தாட்கோ, ராமநாதபுரம், என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago