சிவகங்கை அரசு மருத்துவமனையில் - குளுக்கோஸ் பாட்டிலை நோயாளிகளின் உறவினர்கள் கையில் ஏந்தும் நிலை :

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் பாட்டிலை நோயாளியின் உறவினர் கையில் ஏந்தும் நிலை உள்ளது. போதிய குளுக்கோஸ் ஸ்டாண்டுகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவ மனையில் சில வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்ட் இல்லை. பல வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் வகையில் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த கொக்கிகளும் சேதமடைந்து விட்டனஅறுவை சிகிச்சைக்கு பிறகு அனுமதிக்கப் படும் பெண்கள் வார்டில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாட்டில்களை உறவினர்களை கையில் பிடிக்கச் சொல்லி நோயாளிகளுக்கு ஏற்றுகின்றனர். அனைத்து வார்டுகளிலும் தேவையான குளுக் கோஸ் ஸ்டாண்டுகளை வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந் துள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மேற்கூரைகளில் உள்ள கொக்கிகள் சேதமடைந்து விட்டன. இதனால் அவசரமான நேரங்களில் உறவினர்களை பிடிக்க சொல்லும்நிலை ஏற்படுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் வேறு வார்டுகளில் பயன்பாடின்றி உள்ள ஸ்டாண்டுகளை எடுத்து வந்து பயன்படுத்துகிறோம் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE