வ.உ.சி. கல்லூரியில் தூய்மை பணி :

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகங்கள் மற்றும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை தூர்வாரி சுத்தப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தூத்துக்குடி வஉசி கல்லூரியில் தூய்மைப் பணி நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு தொடங்கி வைத்தார். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 100 பேர் கல்லூரி வளாகத்தை முழுமையாக சுத்தம் செய்தனர். கட்டிடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டன. மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் தூர்வாரி சீர் செய்யப்பட்டன.

உடைந்த மற்றும் பழுதான நிலையில் இருந்த மரக்கிளைகள், தேவையற்று கிடந்த குப்பைகள் மற்றும் பொருட்கள் அகற்றப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் சே.செல்வம், பி.மருது பாண்டியன், ஆர்.ஆர்.முத்துசுடர்க்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்