ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார்.
வாக்குகள் எண்ணப்படவுள்ள கலவை ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்குகள் எண்ணப்படவுள்ள அறைகள், வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்லும் பாதை மற்றும் அங்கு தடுப்புகள் அமைப்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந் திரன், திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து திமிரி, ஆற்காடு மற்றும் வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்ற மனுக்கள் பரிசீலனை பணியையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, வேட்பு மனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு குறித்த விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago