திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது அம்மாபாளையம். இங்குள்ள 11-வது வார்டு கணபதி நகர், கானக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளை, லாரிகளில் கொண்டு வந்து, கணபதி நகர் பாறைக்குழியில் கொட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, கடையடைப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 20-ம் தேதி ஈடுபட்டனர். பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் எனக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுஅளித்திருந்தனர்.இந்நிலையில், பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பையால் ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, தினசரி கிருமிநாசினி மருந்து தெளித்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணியையும் மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. மேலும் குப்பையில் துர்நாற்றம் வீசாதபடி மண்ணும் கொட்டப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago