கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை அதிகரிக்கத் தொடங்கியது.

நேற்று மாலை நிலவரப்படி கிருஷ்ணகிரி அணைக்கு விநாடிக்கு 711 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடி தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திதுக்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் 177 கனஅடி தண்ணீரும், தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 400 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவைப் பொருத்தும், அணையின் பாதுகாப்பு கருதியும் தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண் டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்