தமிழக அரசு ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 2,500 கிராம ஊராட்சிகள் தேர்வுசெய்யப்பட்டு, தரிசு நிலங்களை ஒருங்கிணைத்து தொகுப்பாக உருவாக்கி வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ் ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டாரத்துக்கு 5 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 60 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் வேளாண்மை துறையுடன் இணைந்து மேலும் 12 துறைகள், தங்கள் துறைகளின் திட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago