திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கில் பல்வேறுதளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நேரத்தை கோயில் நிர்வாகம் நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக கோயில்நிர்வாகம் சார்பில் வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 23.09.2021 முதல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். எனவே, பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அரசு உத்தரவுபடி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago