ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட - வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு : இன்று மனுக்கள் மீது பரிசீலினை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில் மனுதாக்கல் நேற்று மாலையுடன் நிறை வடைந்தது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. செப்டம்பர் 15-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங் களிலும், கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற்று வந்தனர்.

செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலினை இன்று நடைபெறுகிறது. வரும் 25-ம் தேதி மனுக் களை திரும்பப் பெற விரும்புவோர் வாபஸ் பெறலாம். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அன்றைய தினம் வெளியிடப்படும்.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 விதமான வாக்குகளை வாக்காளர்கள் செலுத்த உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர கண்காணிப்புக்குழு, பறக்கும்படையினர் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண் காணிப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை யொட்டி திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணி குறித்தும், தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளி யிட்டுள்ளனர்.

இதில், திமுக ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும் போட்டியிடு கின்றன. இது தவிர பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட இதர அரசியல் கட்சிகள் தனித்துப்போட்டியி டுகின்றன. அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 பதவிகளுக்கு இதுவரை 13 ஆயிரத்து 425 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று காலை வேட்பு மனுதாக்கல் தொடங்கிய உடன் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது ஆதரவாளர்கள், கட்சியினர், உறவினர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய தாரை, தப்பட்டையுடன் வந்தனர்.

வேட்பாளருடன், மாற்று வேட்பாளர், கட்சி நிர்வாகிகள் என 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ய உள்ளே அனுமதிக்கப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால், அனைத்து இடங்களிலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று மாலை நிலவரப் படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 பதவிகளுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. வேலூர் மாவட்டத்தில் அம்முண்டி ஊராட்சியும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நெக்னாமலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்பூர் வட்டம், மாதனூர் ஒன்றியத் துக்கு உட்பட்ட நாயக்கநேரி ஊராட்சியில் 9 வார்டுகளிலும் போட்டியிட நேற்று மாலை 5 மணி வரை யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் அந்த வார்டில் தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்