தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தி.மலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்க ஏற்ப வேலைவாய்ப்பு பெற்று தருவதற்காக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25-ம் தேதி காலை 9 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற் கின்றன.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. தனியார் துறையில் வேலைக்கு சென்றால், பதிவு ரத்து செய்யப்பட்டுவிடும் என அச்சப்பட வேண்டாம். 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படித்தவர்கள் பங்கேற்கலாம். 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஜாதிச் சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago