வீட்டுக் கடனுக்கு காப்பீடு செய்தவர் உயிரிழந்த பிறகு - காப்பீட்டு தொகையை தர மறுத்த : நிறுவனம், வங்கிக்கு அபராதம் : கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவு

வீட்டுக் கடனுக்கு காப்பீடு செய்தவர்உயிரிழந்த பிறகு உரிய காரணமின்றி காப்பீட்டு தொகையை தரமறுத்த காப்பீட்டு நிறுவனம் மற்றும்கடன்பெற்ற வங்கிக்கு ரூ.50 ஆயிரம்அபராதம் விதித்து கோவை நிரந்தரமக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

கோவை பள்ளபாளையம் அருகில் உள்ள ஒட்டர்பாளையத் தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (30). இவர், வீடு கட்டுவதற்காக கோவை சர்க்யூட் ஹவுஸ் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.10 லட்சம் வீட்டுக்கடன் பெற்றுள்ளார். அப்போது, அந்த வங்கியின் அறிவுறுத்தலின்பேரில், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் வாங்கிய கடனை அடைப்பதற்காக, 2023-ம் ஆண்டு வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 2019 நவம்பர் மாதம் சந்தோஷ் உயிரிழந்தார். இதையடுத்து, வாங்கிய கடனை காப்பீடு மூலம் நேர்செய்துகொள்ளுமாறு சந்தோஷின்இறப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை அவரது மனைவி சுகன்யா, காப்பீட்டு நிறுவனம் மற்றும் வங்கியில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், காப்பீட்டு நிறுவனம் தரப்பில் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துள்ளனர்.

வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையை செலுத்தவேண்டுமென்றும், இல்லையெ னில் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுகன்யா கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனுஅளித்தார். அந்த மனுவை விசாரித்தநிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான உமாராணி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், “மனுதாரரின் கணவர் இறந்துவிட்டதால் அவருக்கு அளிக்க வேண்டிய காப்பீட்டு தொகை ரூ.10.29 லட்சத்தை 15 நாட்களுக்குள் காப்பீட்டுநிறுவனம், வங்கி ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும். அந்த பணத்தை மனுதாரரின் கணவர் வாங்கிய ரூ.10 லட்சம்வங்கி கடனுக்கு நேர் செய்துகொள்ள வேண்டும். இந்த தொகையை நேர் செய்யும் வரைஎதிர்மனுதாரர்களோ, அவர்களது ஆட்களோ கடன் தொடர்பாக மனுதாரரை வேறு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. காப்பீட்டு தொகையை அளிக்கத் தவறினால், மனுதாரரின் கணவர் இறந்த தேதியில் இருந்து காப்பீட்டு தொகையைஅளிக்கும் வரை 6 சதவீத வட்டி செலுத்த வேண்டும். மனுதாரருக்கு வங்கி, காப்பீட்டு நிறுவனம் இணைந்து ரூ.50 ஆயிரம் அபராதத்தை இழப்பீடாக அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE