நாமக்கல்லில் கழிநீர் கால்வாய் தூர்வாரும் பணி தொடக்கம் :

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் உள்ள கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 ஊராட்சிகளில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி சேந்தமங்கலம் சாலை-குட்டைத் தெரு இணையும் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 140 கி.மீ., கழிவுநீர் கால்வாய்களில் முதல்கட்டமாக 50 கி.மீ., நீளத்திற்கான கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கி 6 நாட்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கால்வாய்களில் இருந்து அகற்றப்படும் கழிவு படிமங்கள் உடனுக்குடன் லாரிகள் மூலமாக அகற்றப்பட்டு கொண்டு செல்லப்பட உள்ளன. இதனால் மழைக்காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால் நகரில் உள்ள மழைநீர் விரைந்து வடிந்து எளிதில் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும், என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், பொறியாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்