விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மூன்று வேளாண்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலை கண்டித்தும் நேற்று விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மத்தியஅரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட்டன.

இதனை தொடர்ந்து ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறி யது: உள்ளாட்சி தேர்தலில் தலைவர் உள்ளிட்ட பதவிகள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு ஊராட்சி யில் பெரும்பான்மையாக உள்ளசமூகத்தினர் தங்கள் சமூகத்தை மட்டும் முடிவு செய்து கொண்டுமற்றவர்கள் வாக்கு தேவை யில்லை என்பதாக இந்த ஏலமுறைநடத்தப்படுகிறது. இதை அனுமதித் தால் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி போல அது இன்னொரு வகையில் உள்ளாட்சி அமைப்பையே சீர் குலைப்பதாக அமைந்துவிடும். சமத்துவத்திற்கு எதிராக போய்விடும். இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்