நாட்டார்மங்கலத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க மறுத்தால் தேர்தல் புறக்கணிப்பு :

By செய்திப்பிரிவு

நாட்டார்மங்கலம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கிராம மக்கள் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ஈசாந்தை கிராமத்தில் பெரும் பான்மையான வாக்காளர்கள் உள்ளதால், அக்கிராம மக்களே முடிவு செய்யும் நபரே உள்ளாட்சிப் பிரதிநிதியாகும் நிலை இருந்து வருகிறது. இதனால் துணைக் கிராமமான நட்டார்மங்கலம் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது நடைபெறவுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை ஈசாந்தை கிராம மக்களே முடிவு செய்து, தயார் செய்து வைத்திருக்கின்றனர். இதனால் தங்கள் ஊராட்சியைச் சேர்ந்த நபர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லாத நிலை உருவாகியிருப்பதோடு, எவ்வித அடிப்படை வசதிகளும் மேம்படுத்தபடாமல் கிடப்பிலேயே உள்ளதாக நாட்டார்மங்கலம் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று நாட்டார்மங்கலம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், தங்கள் கிராமத்தை தனி ஊராட்சி பிரித்து அறிவிக்க வேண்டும். இதனை மறுக்கும் பட்சத்தில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகக் கூறி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

துணைக் கிராமமான நட்டார்மங்கலம் பாதிப்புக்குள்ளாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்