புதிய வேளாண் சட்டங்களை எதிர்த் தும், பெட்ரோல் விலையை குறைக்கக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் திமுக கூட்டணிக் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். காங்கிரஸ் நகரத் தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் தேசபந்து திடலில் திமுக நகரச் செயலர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜபாளையத்தில் நகர திமுக அலுவலகம் முன் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையிலும், ராஜபாளையம் நகர காங்கிரஸ் அலுவலகம் முன் மேற்கு மாவட்டத் தலைவர் ரெங்கசாமி தலைமையிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.ராஜபாளையத்தில் நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர். (வலது) போடி திமுக அலுவலகம் முன் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த கட்சியினர்
தேனி
போடி திமுக அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கம்பத்தில் திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
கமுதியில் உள்ள தனது வீட்டின் முன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நவாஸ்கனி எம்.பி., சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தில் தனது வீட்டின் முன்பும், திமுக எம்எல்ஏ முருகேசன் பரமக்குடியிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல், மார்க்சிஸ்ட், விசிக, மனிதநேய மக்கள் கட்சி சார்பிலும் போராட்டங்கள் நடந்தன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ மாங்குடி தலைமையிலும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையிலும், இளையான்குடி அருகே முனைவென்றியில் தமிழரசி எம்எல்ஏ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago