ரூ.12,772 கோடியில் அமைக்கப்படவுள்ள - உப்பூர் அனல்மின் நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு : வருவாய் அலுவலர் கூட்டத்தை விட்டு வெளியேறிய விவசாயிகள்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உப்பூர் அனல்மின் நிலை யம் அமைக்க தங்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட வருவாய் அலுவலரின் கூட்டத்திலிருந்து விவசாயிகள், மீனவர்கள் வெளி நடப்பு செய்தனர்.

உப்பூரில் ரூ. 12,772 கோடியில் 1600 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க தமி ழக மின் வாரியம் 2012-ம் ஆண்டு அறிவித்தது. அதன்படி, சுமார் 800 ஏக்கர் நிலம் இத்திட்டத்துக்கு தேவைப்பட்டது. இதில் அரசு நிலம் போக 567 ஏக்கர் விவசாய பட்டா நிலங்களை கையகப்படுத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்பகுதி மாவட்டத்தின் நெற்களஞ் சியம் என்பதால் நிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்திலும் விவசாயி கள் வழக்கு தொடர்ந்தனர். அதனையடுத்து கடந்த 5 மாதங் களுக்கு முன்பு மாநில பசுமைத் தீர்ப்பாயம் இத்திட்டத்துக்குத் தடை விதித்தது.

இந்நிலையில் தமிழக மின்வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், இத்திட்டத்தைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையடுத்து விவசாயி களிடம் நிலங்களை கையகப் படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் விவசாயிகள், மீனவர் களை அழைத்து பேசினார். இதில் விவசாயிகள், மீனவர்கள் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து மீனவர் சங்கப் பிரதிநிதி ஆனந்தன் கூறுகையில்:

விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இத்திட்டத்தை மீண்டும் செயல் படுத்த தமிழக மின்வாரியம் முயற்சிக்கிறது. விவசாயிகள் யாரும் நிலங்களை தர மாட்டார் கள். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்