கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி :

ஈரோடு: கொடிவேரி தடுப்பணையில் குளிக்க இன்று (21-ம் தேதி) முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் பவானிசாகரில் இருந்து உபரிநீர் திறப்பு காரணமாக, கொடிவேரி தடுப்பணையில் குளிக்க ஆகஸ்ட் 31- தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு குறைந்துள்ளதால், இன்று (21-ம் தேதி) முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பூங்காவைச் சுற்றிப் பார்க்கவும் அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர் திறப்பு அதிகரிப்பு

இதனிடையே, பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் விநாடிக்கு 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நீர் கடந்து சென்ற நிலையில், கசிவு ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1833 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1200 கன அடி, காலிங்கராயன் பாசனத்துக்கு 471 கனஅடி, பவானி ஆற்றில் 129 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE