தம்பியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற - திருடனை துணிச்சலாக விரட்டிய 11 வயது சிறுவன் : காவல்துறையினர் பரிசு வழங்கி பாராட்டு

கோவில்பட்டியில் தனது தம்பியிடம் செல்போனை பறித்துச் சென்ற திருடனை பிடிக்க முயன்றபோது, திருடனின் பையில் இருந்து தவறி விழுந்த மற்றொரு செல்போனை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த 11 வயது சிறுவனை காவல் துறையினர் பாராட்டினர்.

கோவில்பட்டி பாரதி நகர் 3-வது தெருவைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் செழியன் (9).அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்புபடிக்கிறார். இவர் தனது வீட்டருகே நின்று, செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர் செழியனிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதைப் பார்த்த செழியனின் அண்ணன் 6-ம் வகுப்பு படிக்கும் நவீன் (11), அந்த நபரை விரட்டிச் சென்றார். அப்போது, அந்தநபரின் சட்டைப்பையில் இருந்துஒரு செல்போன் கீழே விழுந்துள்ளது. அதை எடுத்து பார்த்தபோது, அது தனக்குரியது அல்ல என்பது தெரியவந்தது.

அந்த செல்போனுக்கு வந்தஅழைப்பை ஏற்று நவீன் பேசியபோது, அந்த செல்போனும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நவீனும், அவரது தந்தை சுந்தரபாண்டியனும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அந்த செல்போனை ஒப்படைத்தனர். பின்னர், உரியவரிடம் அந்த செல்போன் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.

சுந்தரபாண்டியன் அளித்த புகாரின் பேரில், சிறுவனிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். திருடனை துணிச்சலுடன் விரட்டிய மற்றும் கீழே விழுந்த செல்போனை ஒப்படைத்த நவீனை பாராட்டி, மேற்கு காவல் ஆய்வாளர் சபாபதி பரிசு வழங்கினார்.

நவீனும், அவரது தந்தை சுந்தரபாண்டியனும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அந்த செல்போனை ஒப்படைத்தனர். பின்னர், உரியவரிடம் அந்த செல்போன் போலீஸாரால் ஒப்படைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE