அரசு போட்டித் தேர்வர்களுக்கு ஊக்குவித்தல் மையம் தொடக்கம் :

தஞ்சாவூரில் அரசு போட்டித் தேர்வர்களுக்காக ஊக்குவித்தல் மையம் நேற்று தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் குடிமக்கள் மன்றம் சார்பில் அரசு போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் ஊக்குவித்தல் மையம் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

தஞ்சாவூர் குடிமக்கள் மன்றத் தலைவர் கா.ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மையத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, காந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கோட்டாட்சியர் வேலுமணி, முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குநர் ரமேஷ்குமார், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சீராளன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேலு, மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன், வட்டாட்சியர் மணிகண்டன், தஞ்சாவூர் குடிமக்கள் மன்ற துணைத் தலைவர் டாக்டர் வரதராஜன், நிர்வாகிகள் மவுலீஸ்வரன், ராதிகா மைக்கேல், சுப்பிரமணியம் அண்ணாமலை, உஷாநந்தினி விஸ்வநாதன், அருணா பாஸ்கர் அருள்தாஸ், சாந்தாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் கூறும்போது, ‘‘இம்மையத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வருபவர்கள் இங்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கிப் படிக்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக் கப்பட்டுள்ளன. மேலும், தேர்வர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சிறப்பு வகுப்புகள் மற்றும் தொடர் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த வாய்ப்பை அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இம்மையத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, ஊர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை 9842455765 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, பதிவு செய்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE