1.77 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் : திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1.77 லட்சம் குழந்தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் தெரிவித்தார்.

தமிழக அரசின் குடும்ப நலத்துறை சார்பில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந் தைகளுக்கு ‘வைட்டமின்-ஏ’ சத்து குறைபாடு நோய்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங் காயம் வட்டாரத்தில் நடைபெற்ற ‘வைட்டமின்-ஏ’ திரவம் வழங் கும் முகாமை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் தலைமை வகித்து நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, "5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி, அறிவுசார் வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்டச் சத்தாக ‘வைட்ட மின்-ஏ’ விளங்குகிறது.

நோயின்றி வாழ சத்தான உணவு வகைகளை ஒவ்வொருகுழந்தைகளுக்கும் வழங்க வேண்டும். வைட்டமின்-ஏ உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை, உள் உறுப்புகளின் சவ்வுப்பகுதியை காப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்-ஏ சத்து இன்றிய மையானதாக விளங்குகிறது.

வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ குறைபாடு மிகுந்த பாதிப்பை உண்டாக்குகிறது.

இதை தடுக்கவே, 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தமிழக அரசின் குடும்ப நலத்துறை சார்பில் ‘வைட்டமின்-ஏ’ திரவம் ஆண்டுக்கு 2 முறை வழங்கப்படுகிறது.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முகாம் செப்டம்பர் 20-ம் தேதி (நேற்று) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 134 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட முகாம் வரும் 27-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும்

இம்முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கான 3-ம் கட்ட சிறப்பு முகாம் அக்டோபர் 4-ம் (திங்கள் கிழமை) அன்று அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வழங்கப் படும். எனவே, தாய்மார்கள் இம்முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவத்தை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, வாணி யம்பாடி நியூடவுன், ஷாகீராபாத், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்