திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அதிகபட்சமாக 56 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது. தொடர் மழை யால் பொதுமக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருப்பத்தூரில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி யடைந்தனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை யளவு விவரம்: ஆலங்காயம் 38 மி.மீ., ஆம்பூர் 56, வடபுதுப்பட்டு 39.2, நாட்றாம்பள்ளி 36.2, கேத்தாண்டப்பட்டி 22, வாணியம்பாடி 18, திருப்பத் தூர் 1.2, என மொத்தம் 210.60 மி.மீ., அளவு மழை பதிவாகியிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago