நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 3 பேர் உயிரிழந்ததால், அந்த இடங்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்காக கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சியில் (வார்டு எண் 4), சேரங்கோடு ஊராட்சியில் (வார்டு எண் 11) என தலா 6 வாக்குச்சாவடிகள், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் (வார்டு எண் 6) ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது ‘‘மசினகுடி ஊராட்சியில் 3,786 பேர், சேரங்கோடு ஊராட்சியில் 4,563 பேர், நடுஹட்டி ஊராட்சியில் 451 பேர் வாக்காளர்களாக உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் 8,800 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரோனா பாதித்தவர்கள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிவறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago