இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘எனது கிராமம் எனது பெருமை’ திட்டத்தின் கீழ் வரும் உதகையில் உள்ள குருத்துக்குளி கிராமத்தில் ‘உலக சிறுதானியஆண்டு-2023’-ஐ கொண்டாடும் விதமாக ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரம் வளர்ப்புக்கான பிரச்சாரக்கூட்டம் நடந்தது.
மையத்தின் விஞ்ஞானி கஸ்தூரிதிலகம், மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு சமச்சீர் ஊட்டச்சத்தின் அவசியம் குறித்தும், அதில் சிறுதானியங்களின் பங்கு குறித்தும் பேசினார்.
மையத்தின் முதன்மைவிஞ்ஞானி க.ராஜன், சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் அதன் நன்மைகளைப் பற்றி பேசினார். முதன்மை விஞ்ஞானி பு.ராஜா, மரம் வளர்ப்பு மற்றும் அதன் நன்மைகள், குறிப்பாக காலநிலை மாற்றத்தில் அதன் பங்கு பற்றி பேசினார்.
மையத்தின் தலைவர் ப.சுந்தராம்பாள் தலைமை வகித்து, பயிர் சுழற்சியில் சிறுதானியங்களையும் சேர்த்துக்கொண்டுமண்ணின் வளத்தை பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், ஊர் தலைவர்கள் பாலைய்யா,ராகு உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago