(விளம்பரதாரர் செய்தி...) - ஏதர் மின்சார ஸ்கூட்டர்  நிறுவனத்தின் புதிய விற்பனை மையம் : கோவை ராம்நகரில் தொடக்கம்

மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதர் எனர்ஜி நிறுவனம், முன்னணி இரு சக்கர சர்வீஸ் நிறுவனமான ராஜ்துரைஸ் இ-வெஹிகிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவை, ராம்நகரில் ஏதர் ஸ்பேஸ் என்ற பெயரில் தனது புதிய விற்பனை மையத்தை தொடங்கியுள்ளது. இங்கு, இந்தியாவின் வேகமான மற்றும் மிடுக்கான ஸ்கூட்டர்களில் ஒன்றான ஏதர் 450 X மற்றும் ஏதர் 450 பிளஸ் ஆகிய வாகனங்களை ஓட்டிப்பார்த்து வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருச்சிக்குப் பிறகு மூன்றாவதாக கோவையில் ஏதரின் இந்த விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை நகரில்  ஏதர் 450 X வாகனத்துக்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,46,296. ஏதர் 450 பிளஸ் வாகனத்துக்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,27,286 ஆகும். தமிழ்நாடு அரசின் மானிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த விலை மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி நவ்னீத் ஃபோகேலா கூறும்போது, “இரு சக்கர மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தமிழக அரசுக்கும், ராஜ்துரைஸ் இ-வெஹிகிள்ஸ் நிறுவனத்துக்கும் பெரும் பங்குள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 3 நகரங்களில் செயல்பட்டு வருகிறோம். நடப்பாண்டு இறுதிக்குள் மேலும் சில நகரங்களில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ராஜ்துரைஸ் இ-வெஹிகிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி கூறும்போது,“எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பை பெற்று வருகிறோம். ஏற்கெனவே 400 வாகனங்களை விற்பனை செயஂதுளஂளோமஂ. எங்களுக்கு திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி ஆகிய இடங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE