அமராவதி அணையில் இன்று தண்ணீர் திறப்பு :

அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக இன்று (செப்.20) தண்ணீர் திறக்க அரசு உத்தர விட்டுள்ளது.

இதுகுறித்து அமராவதி அணை பொதுப்பணித் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய, புதிய பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையில் இருந்து இன்றுமுதல் (செப்.20) வரும் 2022 பிப்ரவரி 2-ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 10 பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளான (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) 21,867 ஏக்கர் பயன்பெறும் வகையில், சம்பா சாகுபடிக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்காக 4,536 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும்.

அமராவதி பிரதான கால்வாய் மூலம் 25,250 ஏக்கருக்கு 7,197 மில்லியன் கனஅடி மிகாமல் தண்ணீர் திறக்கப்படும். 135 நாட்களில் 70 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு மற்றும் 65 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் தகுந்த இடைவெளிவிட்டு திறக்கப்படும்.

இதன்மூலம் தாராபுரம் வட்டத்தில்- 8,416 ஏக்கர், கரூர்- 2,219, அரவக்குறிச்சி-11,232, உடுமலை-1,781 மடத்துக்குளம்-11,469, தாராபுரம்-12,000 என மொத்தம்- 47,117 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE