நாட்டின் பாதுகாப்புக்காக சேது சமுத்திர திட்டம் அவசியம் : தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் கூறிய தாவது:

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி கிடைக்கும். ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உள்நாட்டில் இதன்மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும்.

நாட்டின் விடுதலைக்கு முன்னர் ஆங்கிலேயர் திட்டமிட்ட திட்டச் செலவு ரூ.24 லட்சம் மட்டுமே. இன்றைய மதிப்பீடு பல்லாயிரம் கோடி. இனியும் தாமதித்தால் பல லட்சம் கோடியாக உயர்ந்துவிடும். இலங்கையுடன் சீனா நட்பு பாராட்டிவரும் வேளையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கடலின் குறிப்பிட்ட எல்லை வரை ஆழப்படுத்த முயற்சிக்காமல், தென்கோடியில் சாத்தியமான நிலப்பகுதியைத் தேர்வுசெய்து கால்வாயாகத் தோண்ட வேண்டும். அப்போது மீன்வளம் பாதிக்கப்படாது, செலவும் குறையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

நிலப்பகுதியைத் தேர்வு செய்து கால்வாயாகத் தோண்டினால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தமிழகத்துக்கு அத்தியாவசியமான இத் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்