மண்டபம் வனச் சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனத் துறையினரும், மண்டபம் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் இணைந்து ஹோவர்கிராப்ட் படகு மூலம் மண்டபம் அருகே மனோலி தீவுப் பகுதியில் நேற்று கூட்டு ரோந்து சென்றனர்.
அப்போது நடுக்கடலில் நாட்டுப்படகு நின்றிருந்தது. அதைச் சோதனை செய்த வனத் துறை, இந்தியக் கடலோரக் காவல் படையினர் சாக்கு மூட்டைகளில் உயிருடன் இருந்த 1,500 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். கடல் அட்டையை கடத்தியவர்களை தேடி வருவதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago