பென்னாகரம் அருகே சமூக ஊடகம் மூலம் பழகி கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் மோசடி :

By செய்திப்பிரிவு

பென்னாகரம் வட்டம் நலப்பரம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கிறிஸ்டிதாஸ் (21). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ மெக்கானிக்கல் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது பேஸ்புக் கணக்கில் ஜீலி பேட்ரிக் என்ற பெயரில் இருந்து நட்பு அழைப்பு வந்துள்ளது. அதையேற்று அவருடன் நட்பான கிறிஸ்டிதாஸ் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக அவருடன் பழகி வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 15-ம் தேதி அவருக்கு ஐ போன், ஜெபமாலை, ஆலிவ் ஆயில், புனித நீர், பைபிள், 60 ஆயிரம் டாலர் தொகை ஆகியவை ஆதரவற்றோர் இல்லங்கள் மூலம் அனுப்பி உள்ளதாகவும், அவற்றை பெற்றுக் கொள்ள கூரியர் கட்டணமாக ரூ.25 ஆயிரத்து 500 மற்றும் டாகுமெண்ட் கட்டணமாக ரூ.75 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என ஜீலி பேட்ரிக் தெரிவித்துள்ளார்.அதை நம்பிய கிறிஸ்டிதாஸ் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. ஒரு லட்சத்து ஆயிரம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் ஜீலி பேட்ரிக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை கிறிஸ்டிதாஸ் அறிந்தார்.இதுதொடர்பான புகாரின்பேரில் தருமபுரி சைபர் கிரைம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE