கப்பலில் வேலை வாங்கித் தருவதாக - 9 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி : ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் கைது

By செய்திப்பிரிவு

வெளிநாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக 9 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நபரை தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் வெளிநாடு களில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக மோசடி நடைபெறு வதாக சிலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமாரிடம் புகார் தெரிவித்தனர். எஸ்பி உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவன் மேற்பார்வையில், ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் தூத்துக்குடி மில்லர்புரத் தில் ஷிப்பிங் நிறுவனம் நடத்தி வந்த அ.மைக்கேல் ராஜ் (41) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணை யில் அந்தோணி ரூபன் என்பவ ரிடம் ரூ. 2 லட்சம், மரியஜோஸ் ஸ்டானி என்பவரிடம் ரூ.3.30 லட்சம், முகம்மது ஜாபித், பிரியத், ஜார்ஜ் ஆகியோரிடம் தலா ரூ.50 ஆயிரம், மரிய அன்டோ ராஜன், மெக்வின் , கந்தராஜ் ஆகியோரிடம் தலா ரூ.1 லட்சம், சாமுவேல் பாட்ரிக் என்பவரிடம் ரூபாய் 40,300 என 9 பேரிடம் வெளிநாடுகளில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக மொத்தம் ரூ.10,20,300 மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் இதுபோல் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் இதுகுறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு மோசடி நபரை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீஸாரை எஸ்பி பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்