நெல் கொள்முதலுக்கான முன்னேற்பாடுகளை உடனே மேற்கொள்ள அரசுக்கு வலியுறுத்தல் :

தஞ்சாவூர்: ஏஐடியுசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் அ.சாமிக்கண்ணு, நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கணபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் அதிக விளைச்சல் காரணமாக நெல் கொள்முதலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, அதை எதிர்கொள்ள சணல், சாக்கு, சேமிப்பு நிலைய ஏற்பாடு, உடனுக்குடன் இயக்கம் செய்வதற்கான திட்டம், போதிய பணியாளர்கள் உள்ளிட்டவை குறித்த முன்னேற்பாடுகளை உடனடியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூட்டை ஒன்றுக்கு எடைக் கூலியாக ரூ.12 வழங்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்