கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (19-ம் தேதி) 510 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயன்பெறும் வகையில் கரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 10 ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனைகள் என 510 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளன.
மாவட்டத்தில் கோவிஷீல்டு 34,100 டோஸ், கோவேக்சின் 15,450 டோஸ் என மொத்தம் 49,550 டோஸ்கள் கையிருப்பு உள்ளது.
எனவே, பொது மக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறிப்பாக கரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago