: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா தகவல் :

By செய்திப்பிரிவு

ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுக் கூட்டம் நேற்று (18-ம் தேதி) தொடங்கி 19, 20,21 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க ஓசூர் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் எல்லாம் தனியார் மயமாக்கப்படுகிறது. அதைப்போலவே விண்வெளி மையம், அணுமின் துறை, நிலக்கரி துறை, ரயில்வே துறை மேலும் விமானத்துறையில் கூட தனியார் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா திண்டாட்டம் பலமடங்கு பெருகி வருவது குறித்து மத்திய அரசு கவலைப்படுவதாக இல்லை. மத்தியில் பாஜக அரசு அகற்ற வேண்டும் என 19 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 20 முதல் 30 வரை நாடு தழுவிய கண்டன இயக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 27-ம் தேதி விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், திருப்பூர் எம்பி சுப்பராயன், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், மாநில விவசாய சங்க துணைத்தலைவர் லகுமைய்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE