சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி கூட்டமைப்பின் - மருந்து உற்பத்தியாளர்கள் புதுவை அரசுக்கு நன்றி :

புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர் வேதா, ஹோமியோபதி, யுனானி மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் சுஹா( SUHA)அமைப்பின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சுசான்லி டாக்டர் சி. ஏ. ரவி தலைமை தாங்கினார். தாத்திரி நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர் ராஜேஷ் குமார் மற்றும் பல நிறுவனங்களை சார்ந்த மருத்துவர்கள் அன்வர்பாஷா, சரவணகுமார் மற்றும் ரவிச்சந்திரன், வைத்திஸ்வரன், அகமத், அப்துல் ரஹ்மான், ராமலிங்கம் உள்பட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

இதில் சித்த மருத்துவம் உள்ளிட்ட இயற்கை முறை மருத்து வர்களுக்கு மருத்துவமனை ஆய்வுக்கூடங்கள் தொடங்கிட முடிவு செய்து அறிவித்துள்ள புதுவை அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அரசின் தேவைக்கு குறைந்தபட்சம் 50 சதவீத மருந்துகளை புதுவை மாநில உற்பத்தி யாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என வேண்டு கோள் வைக்கபட்டது.

புதிய மருந்துகளுக்கான லைசென்ஸ் மற்றும் உரிமம் புதுப்பித்தல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும். இந்தியாவின் பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்ட சித்தா,ஆயுர்வேதா, யுனானி, ஹோமி யோபதி மருந்துகளுக்கு புதுவைமாநிலத்தில் தடையின்றி உடனடி யாக அனுமதி வழங்க ஆவண செய்ய வேண்டும். இந்திய முறைமற்றும் ஹோமியோபதி மருந்துகள்ஆய்விற்கான ஆய்வுக் கூடத்தை உடனே நிறுவ அரசு உதவ வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அபிராமி லேப் உரிமையாளர் ராம்ஜி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்