கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான மரப்பெட்டிகளை, வி.கிருஷ்ணன் என்பவர் செய்து கொடுத்துள்ளார். இதற்கு வழங்கப்பட்ட தொகையில் ரூ.65,500 நிலுவை இருந்தது. இதை வழங்குவதற்கு அப்போது வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள ஏ.கோவிந்தராஜன்(64), மேலாளராக இருந்த மகாலிங்கம்(46) ஆகியோர் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி ஊழல் தடுப்பு கண் காணிப்பு பிரிவில் புகார் அளித்த கிருஷ்ணன், அவர்கள் ஆலோசனைப்படி மேற்கண்ட இரு வரிடமும் லஞ்சமாக ரூ.5,000 ரொக்கத்தை கொடுத்தபோது, ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவினர் இருவரையும் கைது செய்தனர்.
கரூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், ஏ.கோவிந்த ராஜன், மகாலிங்கம் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை, தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago