நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகிய அமைப்புகள் சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா தலைமை வகித்தார். எம்எல்ஏ ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த ஓட்டம் பாலக்கரை வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவ னங்களின் தாளாளர் சிவசுப்பிர மணியன், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுருதி, மாவட்ட விளையாட்டு அலு வலர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகை யில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டத்தை ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து, ஆட்சியர் அலு வலகம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலை யம் வழியாக விளையாட்டு அரங்கை அடைந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் நடைபெற்ற ஓட்டத்தில் முழுவதுமாக ஆட்சியர் கவிதா ராமு கலந்துகொண்டு ஓடினார். முன்னதாக, உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சி யர் அபிநயா, மாவட்ட விளையாட்டு அலுவலர் வி.குமரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோயல் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago