நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்களை - ஒரு வாரத்துக்குள் தூர் வாரி முடிக்க திட்டம் : கரூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்களை நாளை (செப்.20) தொடங்கி ஒரு வாரத் துக்குள் தூர் வாரி முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித் துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கி பாதிப்புகள் உருவாகாத வகை யில், கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்கள், கழிவுநீர் வாய்க் கால்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர் வாருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுட னான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது:

நீர்வழித் தடங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், மழைநீர்வடிகால் கள் ஆகியவற்றை முழுமையாக தூர் வாரி ஒரு வாரத்துக்குள் பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த மாபெரும் தூர்வாரும் இயக்கம் செப்.20-ம் தேதி(நாளை) தொடங்க திட்ட மிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதி களில் உள்ள கழிவுநீர் வாய்க் கால்கள், நீர்வழித்தடங்களை ஒரு வாரத்துக்குள் தூர் வாருவதற்கு, திட்ட அறிக்கை தயாரித்து உடனே சமர்ப்பிக்க வேண்டும்.

கழிவுநீர் வாய்க்கால்களில் தூர் வாரி எடுக்கப்பட்ட கழிவுகளை அருகில் உள்ள குப்பை கிடங்குக்கு எடுத்துச் சென்று அப்புறப்படுத்த வேண்டும். தூர்வாரிய பிறகு கழிவுகள் கொட்டப்பட்ட இடங் களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இப்பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ச.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கூட்ட அரங்கிலும், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காணொலி வாயிலாகவும் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்