பெரம்பலூர் மாவட்டம் வாலிகண் டபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் தேசிய அளவிலான ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் மரத் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு விழா நேற்று நடைபெற்றது.
மையத்தின் தலைவர் வே.எ.நேதாஜி மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.கருணாநிதி சிறுதானிய சாகுபடிக்கான அரசின் திட் டங்கள் குறித்தும், தோட்டக்கலை இணை இயக்குநர் அ.க. பாத்திமா ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்தல் குறித்தும், ரோவர் வேளாண் கல்லூரி முதல்வர் வள்ளியப்பன் சிறுதா னியத்தின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் துணை இயக்குநர் ஏழுமலை ஊட்டச் சத்தில் காய்கறிகளின் பங்கு குறித்தும் பேசினர்.
இதில், ஒருங்கிணைந்த குழந் தைகள் நல வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருணா, ரோவர் வேளாண் கல்லூரி உழவியல் துறைத்தலைவர் வகாப், தொழில்நுட்ப வல்லுநர் ச.கோகிலவாணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago