திண்டுக்கல் – பாலக்காடு வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் :

By செய்திப்பிரிவு

கோவை போத்தனூர் - பொள்ளாச்சி, பாலக்காடு - திண்டுக்கல் ரயில் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின்னர், மின்மயமாக்கல் பணி காரணமாக, பொள்ளாச்சி போத்தனூர் வழித்தடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்கள் இயங்கவில்லை. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல் கோவை - திண்டுக்கல் இடையே பயணிகள் ரயில் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு- பொள்ளாச்சி வழித்தடத்திலும் மின்மயமாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து, தண்டவாளத்தின் உறுதித் தன்மையை பரிசோதிக்க நேற்று அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்டவாள அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி பொருத்திய 3 பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து பாலக்காடு வரையில் இடையில் நிற்காமல் சென்றது. பின்னர் மீண்டும் பாலக்காட்டில் இருந்து ஒவ்வொரு ரயில் நிலையமாக ரயில் நிறுத்தப்பட்டு தண்டவாளங்களின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டது. போத்தனூர் வழித்தடத்தில் 125 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்கி தண்டவாள அதிர்வுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்