உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் எண்ணெய் ஆலையில் ஆட்சியர் ஆய்வு : விற்பனையை அதிகரிக்க ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் நைனாமலை உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் மூலம் எண்ணெய் பொருட்கள் உற்பத்தி செய்வதை நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது கடலை பருப்புகளை கடலையிலிருந்து பிரித்தெடுக்கும் இயந்திரத்தையும், கடலை பருப்பில் இருந்து அரைத்து எண்ணெய் எடுக்கும் இயந்திரத்தையும், அதன் செயல்பாடுகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இங்கு உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்த, சிரத்தையான எண்ணெய் டப்பாக்கள் ஏற்படுத்தவும், சிறுசிறு பாக்கெட்டுகளாக அறிமுகம் செய்து அதனை அதிக அளவில் விற்பனை செய்ய வணிக சங்கங்களின் ஒத்துழைப்பை பெறுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நவணி தோட்டக்கூர்பட்டியில் மகளிர் முன்னேற்ற சங்கத்தினர் கல்யாண ஸ்டோர் என்ற பெயரில் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழிலை மேற்கொண்டு வருவதையும் ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டார்.

புதுச்சத்திரம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், குழந்தை பிறப்பு விவரம், கர்ப்பிணிகள் விவரம், தினமும் வருகை தரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வேளாண் வணிக துணை இயக்குநர் செந்தில்குமார், நபார்டு உதவி பொது மேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்