சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய - ஒப்பந்த பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை :

சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் பணி வழங்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் சம்பளம் என்ற அடிப்படையில், 8 ஆண்டாக பணியாற்றி வந்தனர். தற்போது, தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவுற்றதால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தினர், ஏற்கெனவே பணியாற்றி வந்த ஒப்பந்த பணியாளர்களை நிறுத்தி விட்டனர்.

எனவே, பணியில் இருந்து நிறுத்தப்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர்.

ஒப்பந்த பணியாளர்கள் வள்ளி, தீபா, வசந்தி, குணவதி உள்ளிட்டோர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, உடலில் ஊற்றிக் கொண்டனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, நான்கு பேரையும் டவுன் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்