நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி - கல்லூரி மாணவர்கள் தூத்துக்குடியில் போராட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். நீட் தேர்வில் இருந்துதமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிடப்பில் போடாமல் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும். இந்த தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு விரைவாக பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரா.கார்த்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ரா.நாத், கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் அருண் சோலை, அகிலேஷ் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்து கல்லூரி முன்பாகதர்ணா நடத்தினர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்