மாணவர்கள் மாற்றுச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என இன்போசிஸ் மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் சுஜீத்குமார் தெரிவித்தார்.
செளடாம்பிகா கல்விக் குழுமத்தின் அங்கமான திருச்சி அம்மாபேட்டை ஜெஜெ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கல்லூரி துணைத் தலைவர் ஆர்.செந்தூர்செல்வன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாற்றம் அறக்கட்டளை நிறுவனரும், இன்போசிஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளருமான சுஜீத்குமார் பேசியது:
மாணவர்கள் தகவல் பரிமாற்ற திறன்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.
அப்போதுதான், தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் நிலவும் வாய்ப்புகளை பயன்படுத்தி, சவால்களை எளிதாக எதிர்கொண்டு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்றார். நிறைவாக கல்லூரி முதல்வர் டாக்டர் மதியழகன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago